Thursday, October 1, 2009

கற்பதற்கு எல்லை இல்லை

கற்பதற்கு எல்லையில்லை என்பதை தனது வாழ்வில் நிரூபித்திருக்கிறார் 66 வயதுடைய சோமசுந்தரம் யக்னேச்வரன். வாழ்நாளில் 30 பட்டமேற்படிப்பு, 3 பட்டப்படிப்பு, 14 டிப்ளமோ படிப்புகளை அவர் படித்து முடித்துள்ளார்.

இதன் மூலம் லிம்கா சாதனைப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் அவர்.

பெங்களூர் வாழ் தமிழரான அவர், இறந்த பின்னரும் எம்..பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ரங்கசமுத்தரத்தில் பிறந்த அவருடைய குடும்பம் பெரியது. இவரது தந்தை சோமசுந்தரம் பள்ளித்தலைமை ஆசிரியர். இவருக்கு
8 பிள்ளை. இவர் மூத்தவர். இளம் வயதில் படிப்பில் ஆர்வம் கொண்டு , அதிக அளவில் பட்டங்களைப்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டார்.

ஆசை, ஊக்கம், விடா முயற்சி , இவருக்கு வெற்றியைத்தேடிக் கொடுத்தது.
கடைசியாக எம், தேர்வு எழுதிய யக்னேச்வரன் தமது 66 வயதில் காலமானார்.

No comments:

Post a Comment